அமெரிக்காவில், தனது பணிக் காலத்தின்போது கருப்பினப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் காவலருக்கு 263 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதுகுறித்து செய்திகள் தெரிவிப்பதாவது:
ஓக்லஹோமா மாகாணத்தில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர் டேனியல் ஹோல்ட்ஸ்கிளா.
கடந்த 2013 முதல் 2014-ஆம் ஆண்டு வரை அவர் கருப்பினப் பெண்களை பாலியல் பலாத்காரம் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக புகார் கூறப்பட்டது. அவரால் பாதிக்கப்பட்ட டெமெட்ரியா கேம்பல் என்ற பெண், இது தொடர்பாக கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார்.
டேனியலுக்கு எதிராக குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து, அவர் கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டர்.
இந்த நிலையில், டேனியல் மீதான 36 குற்றச்சாட்டுகளில் 18 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்றம் அறிவித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், டேனியலுக்கு 263 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
1