அவுதிரேலியா – மெக்குவாரி தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.7ஆக பதிவாகி உள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமையை அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் அறிக்கை ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
அதில், மெக்குவாரி தீவு பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாகவும், அதனால் பின் அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்பட்டதா என்பது பற்றிய எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை.