உலகிலேயே மிகவும் உயரமான 10 மலைகளில் 8 மலைகள் நேப்பாளத்தில் உள்ளன.
நேப்பாளத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் மலையேறச் செலுத்தப்பட்ட கட்டணம் 5.9 மில்லியன்டொலராகப் பதிவானது.
அதில் முக்கால்வாசிக்கும் அதிகமான தொகை எவரெஸ்ட் மலை ஏறுவதற்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் ஆகும்.
இந்நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இமயமலைப் பகுதியில் உள்ள 97 சிகரங்களில் இலவசமாக ஏற மலையேறிகளுக்கு நேப்பாளம் வாய்ப்பளிக்கிறது.
நேப்பாளத்திலுள்ள சில தொலைதூரப் பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்க அந்த முயற்சி எடுக்கப்படுவதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், நேப்பாளத்தில் இன்னும் அறியப்படாமல் இருக்கும் பொருள்களையும் இடங்களையும் வெளியுலகத்துக்குக் காட்ட முடியும் என்று நம்பப்படுகிறது.
இலவசமாக மலையேறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள 97 தொலைதூர மலைகளில் ஏற மிகக் குறைவானோரே ஆர்வம் காட்டுகின்றனர். இரண்டு ஆண்டுகளில் 68 பேர் மட்டுமே அந்த மலைகளில் ஏறியுள்ளனர்.
ஆனால், எவரெஸ்ட் மலைகளில் ஏற 2024ஆம் ஆண்டு மட்டும் 421 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.