நோர்வேயின் E6 motorway என்ற நெடுஞ்சாலை இரண்டாகப் பிளந்துள்ளமையால், நெடுஞ்சாலைக்கு அருகே இருந்த வீடுகளில் தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
பல மீட்டர் நீண்ட திடீர்ப்பள்ளத்தால் குறித்த நெடுஞ்சாலை பிளந்துள்ளது.
வீதியையொட்டி அமைந்திருந்த ரயில் தடங்கள் சேதமடைந்ததைக் காட்டும் படங்களை, அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
சம்பவ இடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ரயில் தடங்கள் அமைந்திருந்த இடத்தில் நிலத்தை உறுதிசெய்யும் பணி நடந்துகொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
அது திடீர் பள்ளத்தை ஏற்படுத்தியதா என்று தற்போது கண்டறிய முடியவில்லை என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறுகிறது.