செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சுவிட்சர்லாந்து தீ விபத்து: ஐந்து ஆண்டுகளாக பாதுகாப்பு சோதனை செய்யப்படாத பார்!

சுவிட்சர்லாந்து தீ விபத்து: ஐந்து ஆண்டுகளாக பாதுகாப்பு சோதனை செய்யப்படாத பார்!

1 minutes read

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தீப்பற்றிய பார் தொடர்பாக அதிர்ச்சி தரும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தீ விபத்து ஏற்பட்ட அந்த பாரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தீப்பாதுகாப்பு தொடர்பான எந்தவிதமான சோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அந்த வட்டாரத்தில் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 1,400க்கும் மேற்பட்ட தீப்பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்பட்டிருந்தாலும், Le Constellation எனப்படும் இந்த பாரில் 2020ஆம் ஆண்டிலிருந்து எந்தச் சோதனையும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிகாரிகளின் கண்காணிப்பு முறைகள் குறித்து கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, பொது இடங்களில் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்ய சிறப்பு முகவர் நிறுவனமொன்றை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம், கட்டிடங்களின் உட்புறங்களில் நெருப்பைக் கக்கும் அல்லது தீ அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய கருவிகளைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி : சுவிட்சர்லாந்து பார் தீ விபத்து: 40 பேர் உயிரிழப்பு, 115 பேர் காயம்!

Le Constellation பாரில் ஏற்பட்ட இந்தக் கொடூரமான தீ விபத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சராசரி வயது 19 ஆகும் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் 116 பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் 83 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.