செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கனடாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகநபர் கைது!

கனடாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகநபர் கைது!

0 minutes read

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் வைத்து குறித்த நபர், நேற்று கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சந்தேகநபர் தொடர்புடையதாகக் கருதப்படும் அருகிலிருந்த வாகனம் ஒன்றிலிருந்து வெடிக்கக்கூடிய திரவப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், கைது செய்யப்பட்ட நபரின் அடையாளம் மற்றும் அவர் எதற்காக இந்த மிரட்டலை விடுத்தார் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கனடாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களை இலக்காகக் கொண்டு இதுவரை இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

மேலும், டொரெண்டோவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் ஒன்றும் முன்னதாக துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.