தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஆர்யா நடிக்கும் 40 வது திரைப்படத்திற்கு ‘ஹலோ காதல்’ என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான பிரத்யேக டீசரும், படத்தின் வெளியீட்டு திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹலோ காதல்’ திரைப்படத்தில் ஆர்யா -நிகிலா விமல்- வைஷ்ணவி சைதன்யா- ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தி ஷோ பீப்பிள் மற்றும் சில்வர் கிரெய்ன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் டைட்டில் ‘ஹலோ காதல்’ என்றிருப்பதும்.. ஆர்யாவை இரண்டு பெண்கள் காதலிப்பதும்… இது தொடர்பான வண்ணமயமான- இளமை துடிப்புடன் கூடிய- காட்சிகள் இடம் பிடித்திருப்பதாலும்… படத்தின் டைட்டில் டீசருக்கு இளைய தலைமுறை ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் நான்காம் திகதி உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஆர்யாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.