ஸ்பெயினில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினின் வடமேற்குப் பிராந்தியமான பாஸ்க் (Basque) பகுதியில் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 34 வயதுடைய ஆண் மற்றும் 22 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அவர்களின் பெயர் விவரங்களை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.
சந்தேகநபர்களிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பாதுகாப்புப் படைகள் தொடர்பான முக்கிய தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாஸ்க் பிராந்திய பொலிஸாரான எர்ட்செய்ன்ட்சா (Ertzaintza) விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களிடம் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக தேடுதல்களும் விசாரணைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.