செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் அம்புலன்ஸ் சேவையில் பாலியல் முறைகேடு முறைப்பாடுகள் இரட்டிப்பு: பணியாளர்கள் பணிநீக்கமும் அதிகரிப்பு

அம்புலன்ஸ் சேவையில் பாலியல் முறைகேடு முறைப்பாடுகள் இரட்டிப்பு: பணியாளர்கள் பணிநீக்கமும் அதிகரிப்பு

1 minutes read

இங்கிலாந்தின் அம்பூலன்ஸ் சேவையில் பெண்களுக்கெதிரான முறைகேடுகள் மற்றும் பாலியல் ரீதியான தவறான நடத்தைகள் தொடர்பான முறைப்பாடுகள் கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இவ்வாறான 156 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

பணியிடங்களில் பாலியல் ரீதியான பாதுகாப்புத் தொடர்பான காரணங்களுக்காகப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதும் நான்கு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக கிழக்கு இங்கிலாந்து அம்பூலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

2025-2026 காலப்பகுதியில் மாத்திரம் இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்காக 25 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனினும், சம்பவங்கள் அதிகரித்ததை விடவும், பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி முறைப்பாடுகளை முன்வைக்கும் விழிப்புணர்வும் நம்பிக்கையும் அதிகரித்ததன் வெளிப்பாடாகவே இந்த எண்ணிக்கை அமைந்திருப்பதாக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இத்தகைய தவறான நடத்தைகள் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகள் மீது உரிய சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது பணியை விட்டு விலகும் ஊழியர்களின் எண்ணிக்கை ஐந்திலிருந்து பத்தாக உயர்ந்துள்ளதாகவும், இது இவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் நடத்தைகளுக்கான வெளிப்படையான பொறுப்புக்கூறலையும் பின்விளைவுகளையும் காட்டுவதாகவும் அம்பூலன்ஸ் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

பாலியல் ரீதியான தொல்லைகள் மட்டுமன்றி, மதம் சார்ந்த பாகுபாடுகள் மற்றும் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் குறித்த நிறுவனத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நிறுவனத்திற்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது மிகுந்த கவலை அளிப்பதாகத் தலைமை முதலுதவி மருத்துவ அதிகாரியான சைமன் சேஸ் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.