செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் “மரண அச்சுறுத்தலையும் மீறி நாடு திரும்புவேன்” – பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா

“மரண அச்சுறுத்தலையும் மீறி நாடு திரும்புவேன்” – பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா

1 minutes read

2024 ஆம் ஆண்டு மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து ஆட்சியை இழந்து நாட்டை விட்டுத் தப்பியோடிய பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் டிசம்பர் மாதம் தாயகம் திரும்பவுள்ளதாக இன்று திங்கட்கிழமை (16) ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் முன்னெடுத்த எழுச்சியைத் தொடர்ந்து 15 ஆண்டுகால ஆட்சியை இழந்த ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்து தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட கொடிய அடக்குமுறை தொடர்பாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகக் கடந்த ஆண்டு பங்களாதேஷ் நீதிமன்றம் அவருக்குத் தண்டனை வழங்கிய நிலையில், மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு முடிந்துவிட்டதால் அவர் நாடு திரும்பினால் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என பங்களாதேஷ் அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்னர் எச்சரித்திருந்தனர்.

மின்னஞ்சல் ஊடாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில், “நான் நாடு திரும்பினால் எதிர்கொள்ளும் ஆபத்துகளை முழுமையாக அறிவேன். ஆனால் நான் எனது தீர்மானத்தை எடுத்துவிட்டேன்; எந்தவொரு மரண அச்சுறுத்தலும் என்னை எனது சொந்த நாட்டிலிருந்து பிரித்து வைக்க முடியாது. நாடு திரும்புவதற்கு நான் கொடுக்க வேண்டிய விலை மரணம் என்றால், அதனை எதிர்கொள்ளவும் நான் தயாராக இருக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தானாக முன்வந்து நாடு திரும்பத் தீர்மானித்துள்ளதால் இந்தியாவின் உதவியைக் கோரப் போவதில்லை எனக் கூறியுள்ள ஹசீனா, புதுடெல்லியிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயம் ஊடாகத் தனக்குப் புதிய பங்களாதேஷ் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்குமாறு தனது சட்டத்தரணிகள் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தன்னை நாடுகடத்துமாறு மாதக்கணக்கில் கோரி வந்த பங்களாதேஷ் அதிகாரிகள், தற்போது தான் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கும்போது முரண்பட்ட கருத்துக்களைக் கூறி அச்சுறுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தனக்கு எதிராக 600-க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்ற பெற்றோல் குண்டுத் தாக்குதல்களுக்கும் தனது ‘அவாமி லீக்’ கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் அவர் மறுத்துள்ளார்.

தடைசெய்யப்பட்டுள்ள தனது கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், ஆதரவாளர்களின் விசுவாசத்தைத் தக்கவைக்கவுமே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.