குறைந்த முதலீட்டில் தயாராகும் தமிழ் திரைப்படங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நட்சத்திர நடிகராக வலம் வரும் ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘அன்புடன் மகி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் தயாராகி வரும் ‘அன்புடன் மகி’ திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மாளவிகா மனோஜ், பிரேம்குமார், சபரீஷ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஹரி முனியப்பன், கார்த்திக் ராமதுரை, ராகேஷ், காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிச்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் படக்குழுவினர் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
இதில் கதையின் நாயகன் கையில் கருப்பு கயிறுடன் ஒரு மத சின்னத்துடனும்.. கதையின் நாயகி இஸ்லாமிய மத சின்னத்துடனும் தோன்றுவதால்… படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படமாளிகையில் திரையிட திட்டமிடப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.