அள்ளி அணைக்கவும் இல்லை
கொள்ளியும் வைக்கவில்லை
பெட்டியுள்ளும் நீங்கள் இல்லை
புதைகுழி உங்களுக்கில்லை
மண் அள்ளி போடவும் இல்லை
மலர்ப்படுக்கை அங்கு இல்லை
ஊர்வலமாய் வரும் பேழையில்
உங்கள் உடல் இருக்கவுமில்லை
வெடித்து சிதறிய வெளிச்சமாய்
கடித்து குதறிய உடலமாய்
கடலில் கருகிய கட்டையாய்
கை கால் முகமற்ற முண்டமாய்
சிதலமாகிய சதைகளாய்
சிவந்து கலந்த உப்புநீராய்
காற்றில் மணத்த மூச்சாய்
கந்தக கலவையின் மணமாய்
எத்தனை வகையாய்
இவர்களை கொடுத்தோம்
சத்தியம் செய்து
எதை உறுதி எடுத்தோம்
மறப்பதே எங்களின்
மரபென ஆனதால்
கிடைப்பதில் மகிழ்வதே
விடுதலை ஆனதோ
நெஞ்சாங் கூட்டினுள்
நினைவுகள் கனக்க
எங்கிருந்தாலும்
எங்களின் இதயம்
உங்களுக்காக துடிக்கும்
ரேணுகா உதயகுமார்