செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 164 அடி உயரத்தில் சமைத்து விருந்து படைக்கும் அதிசய நிகழ்ச்சி | பெல்ஜியம்164 அடி உயரத்தில் சமைத்து விருந்து படைக்கும் அதிசய நிகழ்ச்சி | பெல்ஜியம்

164 அடி உயரத்தில் சமைத்து விருந்து படைக்கும் அதிசய நிகழ்ச்சி | பெல்ஜியம்164 அடி உயரத்தில் சமைத்து விருந்து படைக்கும் அதிசய நிகழ்ச்சி | பெல்ஜியம்

0 minutes read

பெல்ஜியம் நாட்டின் பிரசில்ஸ் நகரில் 164 அடி உயரத்தில் சமைத்து விருந்து படைக்கும் அதிசய நிகழ்ச்சி நடைபெற்றது. பிரசில்ஸ் நகரின் 10-வது ஆண்டாக வானில் விருந்து என்ற பெயரில் அந்தரத்தில் விருந்து கொடுத்து விருந்தினர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினர். 164 அடி உயரத்தில் செல்லும் இயந்திரத்தில் விருந்தினர்கள் அமர்ந்த உடன் மேஜை அவர்கள் முன் தானாக எழும்பும் படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உயர்தர சமையல் நிபுணர்கள் அந்த இடத்திலேயே சமைத்து விருந்தினர்களுக்கு உற்சாகமாக உணவுகளை பரிமாறினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவருக்கு ரூ.2 லட்சம் வரை நிகழ்சி ஏற்பாட்டாளர்களால் வசூலிக்கப்பட்டது. விருந்தில் கலந்து கொள்ள ஏராளமானோர் ஆர்வமாக இருப்பதால் வானில் விருந்து கொடுப்பதை பல நாடுகளுக்கு விரிவாக்கவும்  செய்ய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.