செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சீனா அமெரிக்காவுக்கு எச்சரிக்கைசீனா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

சீனா அமெரிக்காவுக்கு எச்சரிக்கைசீனா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

1 minutes read

தெற்கு சீன கடல் பகுதியில் அண்டை நாடுகளுடன் ஏற்படும் சச்சரவுகள் தொடர்பாக பயம் ஏதுமில்லை என்று கூறியுள்ள சீனா, ‘இவ்விஷயத்தில் அமெரிக்கா, பனிப்போரில் ஈடுபட்டு வருகிறது’ என குற்றம் சாட்டியுள்ளது.

கிழக்காசிய நாடான சீனா தெற்கு சீன கடல் எல்லை தொடர்பாக, அண்டை நாடுகளான தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுடன் அவ்வப்போது உரசல் போக்கை கையாளுவதால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்க அதன் எல்லை நாடுகளுக்கு அமெரிக்கா, பல்வேறு உதவிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது.

தெற்கு சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் சொந்தம் கொண்டாடி வரும் ஒரு குட்டித்தீவில், சீனா மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகள் தொடர்பாக அமெரிக்க ராணுவ அமைச்சர் ஆஷ்டன் கார்டர் சமீபத்தில் பேசுகையில் ‘சீனாவின் தவறான நடவடிக்கையால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் உருவாகும்’ என எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்ற சீன ராணுவத்தின் கடற்படை தளபதி சுன் ஜியாங்குவோ நேற்று பேசியதாவது: தெற்கு சீன கடல் பிராந்தியம் தொடர்பாக, அண்டை நாடுகளுடன் ஏற்படும் சச்சரவுகள் குறித்து சீனாவுக்கு எவ்வித பயமும் இல்லை.

வழக்கமாக சீனா யாரிடமும் வம்புக்கு போவதில்லை; அதே நேரத்தில் பிரச்னையை பார்த்து பயப்படுவதுமில்லை. இவ்விஷயத்தில் அமெரிக்கா போன்ற சம்பந்தமில்லாத நாடுகள், ஆக்கப்பூர்வமாக பங்காற்ற வேண்டும்; வேறு வகையில் அவை செயல்படுவது விரும்பத்தக்கதல்ல. இவ்வாறு அவர் பேசினார்.அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் சீனா கூறியுள்ள இக்கருத்து, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.