செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பசில் ராஜபக்ச கைது பசில் ராஜபக்ச கைது

பசில் ராஜபக்ச கைது பசில் ராஜபக்ச கைது

0 minutes read

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக் ஷேவின், இளைய சகோதரர் பசில் ராஜபக் ஷே, நில மோசடி வழக்கில், நேற்று கைது செய்யப்பட்டார்.இலங்கை அதிபராக, மைத்ரிபால சிறிசேன பதவி வகிக்கிறார். முந்தைய அதிபர் மகிந்த ராஜபக் ஷேவின் அமைச்சரவையில், பொருளாதார விவகாரத் துறை அமைச்சராக, அவர் சகோதரர் பசில் ராஜபக் ஷே பதவி வகித்தார்.பசில், கம்பஹா மாவட்டத்தில், நிலமோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் வழக்கில், நேற்று, நிதிக்குற்றங்கள் விசாரணைப் பிரிவு மையத்தில் ஆஜரானார். அங்கு நடந்த தீவிர விசாரணைக்கு பின், அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவருக்கு, கோர்ட் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.மைத்ரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தபின், மூன்றாவது முறையாக, பசில் ராஜபக் ஷே கைது செய்யப்பட்டு உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.