அமெரிக்க ராணுவ அதிகாரியும், தகவல் தொழில்நுட்ப நிபுணருமான, தேசவ்னா பார்பெர், 26, அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அமெரிக்க அழகி போட்டி, நேற்று முன்தினம் இரவு, லாஸ் வேகாஸில் நடந்தது. இதில், பலத்த போட்டிகளுக்கு இடையே, பார்பெர் முதலிடத்தைப் பிடித்தார். இதன் மூலம், முதல் முறையாக ஒரு ராணுவ அதிகாரி, அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பார்பெர், ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தன் தந்தை, சகோதரர்கள் வழியில், தன், 17வது வயதில் ராணுவத்தில் சேர்ந்தார் பார்பெர். ”நாட்டுப் பற்றும், தேசத்துக்காக பணியாற்றுவதும் என் உடலின் ஒவ்வொரு அணுவிலும் உள்ளது,” என, அவர் கூறினார்.
டிரம்ப் இல்லாமல்…கடந்த ஆண்டு வரை, அமெரிக்க அழகி போட்டியை, தற்போது
அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ள டொனால்டு டிரம்ப் நடத்தி வந்தார். சில பிரச்னைகளால் அவர் வெளியேறினார். அதேபோல், இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பி வந்த என்.பி.சி., தொலைக்காட்சி விலகியது. இந்த ஆண்டு, ‘பாக்ஸ் டிவி’ இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பியது.