செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் புதிய சாதனை எவரெஸ்டில் ஏறிய முதல் இந்திய தம்பதிபுதிய சாதனை எவரெஸ்டில் ஏறிய முதல் இந்திய தம்பதி

புதிய சாதனை எவரெஸ்டில் ஏறிய முதல் இந்திய தம்பதிபுதிய சாதனை எவரெஸ்டில் ஏறிய முதல் இந்திய தம்பதி

1 minutes read

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்திய தம்பதிகள், புதிய சாதனை படைத்தனர்.மகாராஷ்டிராவை சேர்ந்தவர் தினேஷ், ௩௦. மனைவி தாரகேஸ்வரி ரத்தோடு. இவர்களுக்கு 2008ல் திருமணம் முடிந்தது. இருவரும் மகாராஷ்டிர காவல்துறையில் 2006 முதல் பணிபுரிகின்றனர். இதற்கு முன் இருவரும் ஆஸ்திரேலியாவில் உள்ள உயரமான சிகரம், ஸ்கை டைவிங் உள்ளிட்ட மலை தொடர்பான சாகச போட்டிகளில் பங்கேற்றனர்.
இருவருக்கும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்பது ஆசை. ‘இந்த லட்சியம் நிறைவேறும் வரை குழந்தை பெற்றுக் கொள்வதில்லை’ என முடிவெடுத்தனர். மே 23ல் இத்தம்பதியினர் எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறினர். இதன் மூலம் எவரெஸ்டில் ஏறிய முதல் தம்பதி என்ற சாதனை படைத்தனர். 2015ல் இவர்கள் எவரெஸ்ட்டில் ஏற திட்டமிட்டிருந்தனர். அப்போது நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சாதனை கைகூடவில்லை.

இத்தம்பதியினர் கூறுகையில், ‘இச்சாதனையை உலகளவில் பங்கிட்டு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. எங்களது லட்சியம் நிறைவேறும் வரை குழந்தை பெற்றுக் கொள்வதில்லை என முடிவெடுத்திருந்தோம். விரைவில் பெற்றோர் ஆக விரும்புகிறோம்’ என்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.