செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல்அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல்

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல்அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல்

1 minutes read

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் இருவர் பெண்கள்.

ஆஸ்திரேலிய அரசின் பிரதிநிதிகள் அவையில் மொத்தமுள்ள 150 இடங்களுக்கும், செனட் அவையில் 76 இடங்களுக்கும் ஜூலை 2-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் சீக்கியரான அலெக்ஸ் பந்தால், பசுமைக் கட்சி சார்பிலும், லிசா சிங் (43) தொழிலாளர் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர்.

இந்தியாவில் இருந்து 1989-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த சசி பாட்டியா, கிறிஸ் காம்பியன் ஆகியோரும் தொழிலாளர் கட்சி சார்பில் களத்தில் உள்ளனர். இந்தியாவில் பிறந்து வளர்ந்தவரான மோஹித் குமார் (39) லிபரல் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். ஹரியாணாவைச் சேர்ந்த இவர் 1994-ஆம் ஆஸ்திரேலியாவில் குடியேறினார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து கிறிஸ் காம்பியன் கூறியதாவது:

இப்போதைய சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவில் அரசியலில் பங்கேற்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எதிர்காலத்தில் இந்திய வம்சாவளியினர் அதிகமாக அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் 16-ஆவது வயதிலேயே தொழிலாளர் கட்சியில் இணைந்தேன். எனது கடின உழைப்பால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார் அவர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.