செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அல் ஷபாப் போராளிகள் 110 பேர் பலி | சோமாலியாஅல் ஷபாப் போராளிகள் 110 பேர் பலி | சோமாலியா

அல் ஷபாப் போராளிகள் 110 பேர் பலி | சோமாலியாஅல் ஷபாப் போராளிகள் 110 பேர் பலி | சோமாலியா

1 minutes read

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல் கொய்தா இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய அல் ஷபாப் போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க சோமாலியா ராணுவ வீரர்களுடன் இணைந்து ஆப்பிரிக்க ஒன்றிய கூட்டுப்படையினரும் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் தலைநகர் மொகாதிசுவில் இருந்து 300 கி.மீ தொலைவில் ஹல்கான் நகரில் ஆப்பிரிக்க ஒன்றிய கூட்டுப்படையின் தளத்தில் அல் ஷபாப் போராளிகள் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் ஆப்பிரிக்க ஒன்றிய கூட்டுப்படையினர் 60 பேர் கொல்லப்பட்டதாகவும் அல் ஷபாப் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தகவல் வெளியிட்டார். ஆனால் இது தவறான தகவல் என்று ஆப்பிரிக்க ஒன்றிய கூட்டுப்படை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆப்பிரிக்க ஒன்றிய கூட்டுப்படையின் செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜோ கிபெட் கூறுகையில், “அல் ஷபாப் போராளிகள் தாக்குதல் நடத்தியபோது எதிர் தாக்குதல் நடத்தினோம். இதில் அந்த போராளிகள் 110 பேரை கொன்று குவித்து விட்டோம். ஆப்பிரிக்க ஒன்றிய கூட்டுப்படையினர் 60 பேரை கொன்று விட்டதாக அவர்கள் கூறியது தவறான தகவல்” என குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.