செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மதனை கோர்ட்டில் ஆஜர்படுத்த சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் மதனை கோர்ட்டில் ஆஜர்படுத்த சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல்

மதனை கோர்ட்டில் ஆஜர்படுத்த சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் மதனை கோர்ட்டில் ஆஜர்படுத்த சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல்

1 minutes read

வேந்தர் மூவிஸ்’ நிறுவனத்தின் நிர்வாகியாக இருப்பவர் மதன். இவர் கடந்த மாதம் 28-ந் தேதி திடீரென தலைமறைவானார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். இதற்கிடையில், அவரது தாயார் ஆர்.எஸ்.தங்கம், செய்தார்.

அதில், காணாமல் போன தன் மகன் மதனை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு கடந்த 6-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கித் தருவதாக பல மாணவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக மதன் மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளன என்றும், மதன் காணாமல் போனது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் கூறினார்.

அப்போது, மதன் மீது கொடுக்கப்பட்ட மோசடி புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து விவரம் தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று காலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதன் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், மதன் காணாமல் போனது குறித்து பதிவான வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் அரசு தரப்பு வக்கீல் கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘மதன் மீதான புகார்கள், மதன் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆகியவற்றை விசாரிக்க நேர்மையான, நடுநிலையான போலீஸ் அதிகாரியை போலீஸ் கமிஷனர் நியமிக்க வேண்டும். இல்லை என்றால், சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலை சிறப்பு புலனாய்வு அதிகாரியாக நாங்களே நியமிப்போம்’ என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னர், இந்த வழக்கு நேற்று மாலை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, ‘மதன் தொடர்பான அனைத்து வழக்குகளை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் எஸ்.ராதாகிருஷ்ணனை போலீஸ் கமிஷனர் நியமித்துள்ளதாக’ அரசு வக்கீல் கூறினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘மதன் காணாமல் போன வழக்கு உள்ளிட்ட வழக்குகளின் விசாரணையை கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் மேற்கொள்ள வேண்டும். மதன் எங்கு உள்ளார்? என்பதை கண்டுபிடித்து, ஜூன் 23-ந் தேதிக்குள் அவரை ஆஜர்படுத்த வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.