புளோரிடாவில் உள்ளது ப்டிஸ்னிக்கு சொந்தமான ஆர்லாண்டோவில் உள்ள கிராண்ட் புளோரிடியன் ரிசார்ட் மற்றும் ஸ்பா. இது டிஸ்னி மேஜிக் ராஜ்யத்துக்கு அருகில் உள்ளது.
இங்கு ஏராளமான பார்வையாளர்கள் விடுமுறையை கொண்டாட்ட குடும்பத்துடன் உற்சாகத்துக்காக வருவது வழக்கம். நெப்ராஸ்கா மாநிலத்ததை சேர்ந்த இருந்து ஒரு தமபதியினர் தங்களது மூன்று குழந்தைகளுடன் மன அமைதிக்காக நேற்று இங்கு வந்திருந்தனர்.
அங்குள்ள செவன் சீஸ் லகூன் கடற்கரை அருகில் அவர்களுடைய 2 வயது சிறுவன் அங்கு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென ஒரு முதலை கரைக்கு வந்து சிறுவனை நீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டது.
இதை சற்று தாமதமாகவே சுற்றி இருந்தவர்கள் அறிந்துள்ளனர். சிறுவனின் தந்தை உடனே நீருக்குள் பாய்ந்து தேடினார். எவ்வளவு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.விவரம் பரவிய உடனே ஐம்பது போலீஸ் மற்றும் வன விலங்கு நிபுணர்கள் தீவிரமாக தேடுகின்றனர் ஆனால், குழந்தையை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும், முதலை இழுத்துச் சென்ற சிறுவனை இனியும் மீட்க நினைப்பது வீண் முயற்சிதான் என அங்குள்ள அதிகாரிகளில் ஒருவரான ஷெரீப் ஜெர்ரி டெமிங்ஸ் கூறுகிறார்.
பலியான சிறுவனின் தாய், தந்தையர் கண்ணீருடன் கதறி அழுதது அங்கு எல்லோருடைய மனதையும் கரைத்தது.