செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் திட்டமிட்டபடி 23-ந் தேதி கருத்து வாக்கெடுப்பு நடக்குமா? | இங்கிலாந்துதிட்டமிட்டபடி 23-ந் தேதி கருத்து வாக்கெடுப்பு நடக்குமா? | இங்கிலாந்து

திட்டமிட்டபடி 23-ந் தேதி கருத்து வாக்கெடுப்பு நடக்குமா? | இங்கிலாந்துதிட்டமிட்டபடி 23-ந் தேதி கருத்து வாக்கெடுப்பு நடக்குமா? | இங்கிலாந்து

1 minutes read

இங்கிலாந்தில் பெண் எம்.பி., சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் தொடர்வதா, வேண்டாமா என்பது குறித்து அங்கு திட்டமிட்டபடி 23-ந் தேதி கருத்து வாக்கெடுப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பிரசாரமும் நிறுத்தப்பட்டுள்ளது.

28 நாடுகளின் அரசியல், பொருளாதார கூட்டமைப்பாக ஐரோப்பிய யூனியன் செயல்படுகிறது.

இந்த ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிப்பதா, வேண்டாமா என்ற சர்ச்சை அங்கு எழுந்தது. இதையடுத்து பிரதமர் டேவிட் கேமரூன் கருத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முடிவு செய்தார். இந்த கருத்து வாக்கெடுப்பு வருகிற 23-ந் தேதி அங்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பிரசாரமும் நடைபெற்று வந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாகூட கடந்த ஏப்ரல் மாதம் லண்டன் வந்து, ‘ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து இடம் பெறுவதற்கு ஆதரவாக கருத்து வாக்கெடுப்பில் மக்கள் வாக்களிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். ஐரோப்பிய யூனியனின் உறுப்பினராக இருப்பதால், இங்கிலாந்து உலக அளவில் இடம் பிடித்திருக்கிறது என்றும், தன்னை வலிமை வாய்ந்த நாடாக உருவாக்கி உள்ளது என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.