செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் சர்வதேச பொருளாதாரப் பேரவைக் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பேசியவை பின்வருமாறு:-
மேற்கத்திய நாடுகளுடன் மீண்டும் மனக்கசப்புகளை வளர்க்க ரஷ்யா விரும்பவில்லை. நேட்டோ படை விரிவாக்கம் உள்பட பாதுகாப்பு விவகாரங்களில் ரஷ்யாவுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக கொள்கைகளை வகுக்காமல் இருந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. அமெரிக்கா சக்தி வாய்ந்த நாடு. குறிப்பாக, இன்றைக்கு உலகில் உள்ள ஒரே வலுவான வல்லரசு நாடு அதுதான். அதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அமெரிக்கா போன்ற ஒரு வலுவான நாடு இந்த உலகத்திற்கு தேவை. எங்களுக்கும் தேவைதான். அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், தொடர்ந்து எங்களது விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிட்டு வருவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். எப்படி வாழ வேண்டும் என்பதை அவர்கள் எங்களுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை. அமெரிக்காவின் அடுத்த அதிபராக யார் வந்தாலும் அவருடன் இணைந்து செயல்பட ரஷ்யா தயாராக உள்ளது.
இவ்வாறு ரஷ்ய அதிபர் புதின் பேசினார்.