செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா 5 நகரங்களில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி | அமெரிக்கா5 நகரங்களில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி | அமெரிக்கா

5 நகரங்களில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி | அமெரிக்கா5 நகரங்களில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி | அமெரிக்கா

0 minutes read

வருகிற செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் 5 நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா.

சான் பிரான்சிஸ்கோ, டலாஸ், அட்லாண்டா, நியூ ஜெர்ஸி, வாசிங்டன் டிசி என 5 நகரங்களில் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

1992-ல் உருவான கலாலயா யூ.எஸ்.ஏ. என்கிற அமைப்பின் இந்தியக் கலையை மேம்படுத்தும் முயற்சியில் ஒரு நிகழ்வாக இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சமீபத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை, இளையராஜாவின் 1000-வது படம் என அறிவிக்கப்பட்டது. அதைக் கெளரவப்படுத்தும் விதமாகவும் இந்நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

முதல்முதலாக அமெரிக்காவில், 2013-ல் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார் இளையராஜா. அதன்பிறகு இப்போதுதான் இசை நிகழ்ச்சிகளை நடத்த மீண்டும் அமெரிக்காவுக்கு வருகை தருகிறார். இளையராஜாவுடன் 50 இசைக்குழுவினரும் பிரபல பாடகர்களும் இந்த இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.