செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை அரசு உறுதி | 2018–ம் ஆண்டுக்குள் தமிழர்களின் நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் இலங்கை அரசு உறுதி | 2018–ம் ஆண்டுக்குள் தமிழர்களின் நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும்

இலங்கை அரசு உறுதி | 2018–ம் ஆண்டுக்குள் தமிழர்களின் நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் இலங்கை அரசு உறுதி | 2018–ம் ஆண்டுக்குள் தமிழர்களின் நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும்

1 minutes read

இலங்கை ராணுவம் வசம் உள்ள தமிழர்களின் நிலங்கள், 2018–ம் ஆண்டுக்குள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசு உறுதி அளித்தது.

இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே சுமார் 30 ஆண்டுகளாக சண்டை நடைபெற்றது. இந்த சண்டையின்போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் நிலங்கள் பலவற்றை ராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டது. அந்த நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த போதிலும், ராணுவம் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், அந்த நிலங்களை 2018–ம் ஆண்டுக்குள் திரும்ப ஒப்படைப்பதாக இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பேசிய இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா இதை தெரிவித்தார்.

அங்கு அவர் பேசியதாவது:–

ராணுவம் வசம் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் 2018–ம் ஆண்டுக்குள் திரும்ப ஒப்படைக்கப்படும். இதுதொடர்பாக ராணுவத்துக்கு தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கூட ராணுவம் 701 ஏக்கர் நிலத்தை யாழ்ப்பாணம் மாவட்ட அரசு அதிகாரியிடம் விடுவித்தது. அவற்றில், 201.3 ஏக்கர் நிலம், உண்மையான உரிமையாளர்களிடம் கடந்த 25–ந் தேதி ஒப்படைக்கப்பட்டது.

அதே சமயத்தில், வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக, தமிழர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அதற்குரிய இழப்பீடு முழுமையாக அளிக்கப்படும்.

அதுபோல், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்படும். நாங்கள் அமைக்கும் விசாரணை முறை, பாதிக்கப்பட்டவர்கள் உள்பட அனைத்து தரப்பினரின் நம்பிக்கையை பெற்றதாக இருக்கும்.

இப்போது நீதி விசாரணை அமைக்கும் பணியில்தான் ஈடுபட்டுள்ளோம். இந்த விசாரணையில் சர்வதேச நீதிபதிகளும் இடம்பெறுவதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. கடந்த காலங்களில், சர்வதேச புலனாய்வு நிபுணர்களுடனும், தடயவியல் நிபுணர்களுடனும் இணைந்து பணியாற்றி உள்ளோம். இருப்பினும், சர்வதேச பங்களிப்பு எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் இருப்பது உண்மைதான்.

போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களை பொறுப்பேற்க செய்யும் நடவடிக்கை தாமதமாக நடப்பதாக கூறுவது தவறு. இந்த நீதி விசாரணை முறை, உறுதியானதாகவும், எதிர்பார்க்கும் நோக்கத்தை எட்டவும் உரிய முறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.