தமிழ் மொழியில் அஞ்சல் தலையை, மலேசியாவில் தபால் துறை வெளியிட்டுள்ளது. 70 சென் விலையுள்ள, மலேசிய வடிவமைப்பாளர் வேலு பெருமாள் வடிவமைத்த தமிழ் மொழியில் அஞ்சல் தலை மலேசிய தபால் துறை வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வு மலேசியதமிழ் மக்களுக்கு பெருமையாகவும், தமிழுக்கு மலேசிய அரசு வழங்கியுள்ள கவுரவமாகவும் மலேசியாவில் வாழும் தமிழ் மக்கள் கருதுகின்றனர். தபால்தலையில் “நன்னெறிப்பண்பு” என்ற வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது மற்றும் வேலு பெருமாள் வடிவமைப்பாளர் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நிற வட்ட வடிவதின் மையத்தில் இந்திய பண்பாட்டு நிகழ்வின் துவக்க அலங்காரத்தில் பயன்படுத்தப்படும் தென்னை ஓலை மற்றும் மாவிலை தோரணங்கள் போன்ற வடிவமைப்பில் “நன்னெறிப்பண்பு” என்ற எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
6