செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அட்டூழியம் | 40 பேர் கழுத்தை அறுத்து படுகொலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் அட்டூழியம் | 40 பேர் கழுத்தை அறுத்து படுகொலை

ஐ.எஸ். பயங்கரவாதிகள் அட்டூழியம் | 40 பேர் கழுத்தை அறுத்து படுகொலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் அட்டூழியம் | 40 பேர் கழுத்தை அறுத்து படுகொலை

1 minutes read

சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப்போர் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் முயற்சியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, அங்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது.

இருப்பினும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினர் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன.

இந்த நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள உம் அல்–ஹவுஸ் நகரில் இருந்து தப்பிப்பதற்காக பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 பேர் சிரிய படையினர் வசம் உள்ள பகுதிகளை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் உம் அல்–ஹவுஸ் நகரின் நுழைவாயிலை அடைந்த போது அங்கிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் அனைவரையும் ஈவு இரக்கமின்றி கொடூரமாக கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர்.

மேலும், ‘‘இவர்களை போல் யாரேனும் எங்கள் அனுமதியின்றி இங்கிருந்து தப்பிக்க முயன்றால் இதே போன்று கொடூரமாக கொலை செய்யப்படுவீர்கள்’’ என ஐ.எஸ். பயங்கரவாதிகள் உம் அல்–ஹவுஸ் நகர மக்களுக்கு மிரட்டல் விடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.