செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மகனை பார்க்க அமெரிக்கா வந்த பெற்றோர் கார் விபத்தில் பலிமகனை பார்க்க அமெரிக்கா வந்த பெற்றோர் கார் விபத்தில் பலி

மகனை பார்க்க அமெரிக்கா வந்த பெற்றோர் கார் விபத்தில் பலிமகனை பார்க்க அமெரிக்கா வந்த பெற்றோர் கார் விபத்தில் பலி

1 minutes read

201607081145074182_Indian-family-killed-in-accident-in-New-York_SECVPF

இந்தியாவை சேர்ந்த சந்தன் கவாய்(32) என்பவர் நியூயார்க் மாநிலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த அலுவலகத்தில் பணியாற்றியபடி, தனது மனைவி, குழந்தையுடன் இங்கேயே வசித்து வந்தார். சமீபத்தில் இவரை பார்ப்பதற்காக இந்தியாவில் இருந்து இவரது பெற்றோர் நியூயார்க் நகருக்கு வந்திருந்தனர்.

நியூயார்க்கில் உள்ள சில முக்கிய இடங்களை சுற்றிக்காட்டுவதற்காக சந்தன் கவாய் அவர்களை காரில் அழைத்துச் சென்றார். சபோல்க் கவுண்ட்டியில் உள்ள லங் ஐலேண்ட் பகுதியின் யாபாங்க் மிடில் ஐலேண்ட் விரைவுச் சாலையில் இவர்களது கார் வந்துகொண்டிருந்தபோது எதிர்திசையில் வந்த ஒரு லாரி, அந்தக் காரின்மீது பயங்கரமாக மோதியது.

இதில் இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. காரினுள் இருந்த சந்தன் கவாய், அவரது தந்தை கமல்நயன் கவாய்(74) தாயார் அர்ச்சனா கவாய்(60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சந்தனின் மனைவி மணிஷா(32) உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர்தப்பிய சந்தன் – மணிஷா தம்பதியரின் 11 மாத கைக்குழந்தை அபாயகட்டத்தை தாண்டி சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டிவந்த குஸ்ட்டாவே கேயர்(25) என்பவரும் இந்த விபத்தில் பலியானார். லாரியை ஓட்டிவந்தபோது அனுமதிக்கப்பட்ட அளவைவிட இருமடங்கு குடிபோதையில் இவர் இருந்ததாக தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.