செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை அமல்படுத்த வேண்டும் | பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக போஸ்டர்கள் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை அமல்படுத்த வேண்டும் | பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக போஸ்டர்கள்

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை அமல்படுத்த வேண்டும் | பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக போஸ்டர்கள் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை அமல்படுத்த வேண்டும் | பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக போஸ்டர்கள்

1 minutes read

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என ராணுவத் தளபதியை வலியுறுத்தி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த `மூவ் ஆன் பாகிஸ்தான்’ என்ற கட்சி லாகூர், பெஷாவர், கேட்டா, ராவல்பிண்டி, பைசலாபாத், சர்கோடா மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட 13 நகரில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக சில போஸ்டர்களை ஒட்டியுள்ளது.

அதில், பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனவும், அதை ராணுவ தளபதி ரகில் சரீப் கண்காணிக்க வேண்டும் என்றும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பாக அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அலி ஹாஸ்மி கூறுகையில், ‘‘கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் நாட்டில் இல்லை. இது அரசியல் கட்சி இல்லாமல் நாடு இயங்குகிறது என்பதை நிருபித்துள்ளது. எனவே ராணுவ தளபதியே நாட்டை வழி நடத்தி செல்லலாம்’’ என்றார்.

மேலும் தங்கள் கட்சி சார்பில் லாகூர் மற்றும் பைசலாபாத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
‘மூவ் ஆன் பாகிஸ்தான்’ கட்சி கடந்த 3 ஆண்டுகளாக பாகிஸ்தானில் தேர்தல் கமிஷன் அனுமதி பெற்று இயங்கி வருகிறது. பைசலாபாத்தை சேர்ந்த வியாபாரி முகமது கம்ரான் என்பவர் இதன் தலைவராக உள்ளார். இவருக்கு பைசலாபாத், லாகூர் மற்றும் சர்கோதா பகுதியில் ஏராளமான பள்ளிகள் சொந்தமாக உள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.