செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தின் புதிய வெளியுறத்துறை மந்திரியாக நியமனம்போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தின் புதிய வெளியுறத்துறை மந்திரியாக நியமனம்

போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தின் புதிய வெளியுறத்துறை மந்திரியாக நியமனம்போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தின் புதிய வெளியுறத்துறை மந்திரியாக நியமனம்

1 minutes read

இங்கிலாந்தின் புதிய வெளியுறத்துறை மந்திரியாக போரிஸ் ஜான்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் லண்டன் மாநகரத்தின் முன்னாள் மேயர் ஆவார்.
இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்றது. இதனால் கேமரூன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து பிரதமர் பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து எரிசக்தி மந்திரி ஆண்டிரியா லீட்சம், உள்துறை மந்திரி தெரசா மே ஆகிய 2 பேர் இருந்தனர்.
இதில் ஆண்டிரியா லீட்சம் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் தெரசா மே இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியானது.
இந்த நிலையில் பிரதமர் டேவிட் கேமரூன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ராணி எலிசபெத், புதிய பிரதமராக தெரசா மேவை நியமித்தார். அதையடுத்து, தெரசா மே நேற்று இரவு பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் பிரதமராக பொறுப்பேற்றுள்ள தெரஸா மே தனது தலைமையிலான மந்திரிகளை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளார். அதன்படி, நிதி மந்திரியாக இருந்த ஜார்ஜ் ஆஸ்போர்ன் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த பிலிப் ஹேமண்ட் புதிய நிதி மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் லண்டன் மாநகரத்தின் முன்னாள் மேயராக இருந்த போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தின் புதிய வெளியுறவுத் துறை மந்திரியாகவும், ஆம்பெர் ரட் புதிய உள்துறை மந்திரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டேவிட் கேமரூன் அமைச்சரவையில் பாதுகாப்பு மந்திரியாக இருந்த மைக்கேல் ஃபேலோன், தெரசா மே அமைச்சரவையிலும் பாதுகாப்பு மந்திரியாக தொடர்கிறார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் செய்ய வேண்டிய பணிகளுக்காக தனி அமைச்சகம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதற்கு டேவிட் டேவிஸ் மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.