செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரையும் ‘அப்பா’ படம் பார்க்கச் சொல்லி பள்ளி நிர்வாகம் வேண்டுகோள்மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரையும் ‘அப்பா’ படம் பார்க்கச் சொல்லி பள்ளி நிர்வாகம் வேண்டுகோள்

மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரையும் ‘அப்பா’ படம் பார்க்கச் சொல்லி பள்ளி நிர்வாகம் வேண்டுகோள்மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரையும் ‘அப்பா’ படம் பார்க்கச் சொல்லி பள்ளி நிர்வாகம் வேண்டுகோள்

1 minutes read

சமுத்திரகனி நடிப்பு மற்றும் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘அப்பா’. அப்பா, மகன்-மகள்களின் புரிதல் எப்படி இருக்க வேண்டும், எந்தெந்த விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும் என்பதை இப்படத்தில் சொல்லியிருந்தார் சமுத்திரகனி. இப்படத்தை திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிப்பாளையம் உள்ள தூய திரேசாள் முதனிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரையும் ‘அப்பா’ படம் பார்க்கச் சொல்லி பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

“அப்பா படம் ஒவ்வொரு அப்பாவும் தவறாமல் அவசியம் பார்க்க வேண்டிய படம். அப்பா-பிள்ளைகள் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வாழ்க்கைக்கான பாடமாக அமைந்துள்ளது. இந்த படத்தை பார்க்க பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்காக சலுகை கட்டணம் வழங்க கோபி வள்ளி திரையரங்கம் முடிவுசெய்துள்ளது. வியாழக்கிழமை அன்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு அப்பா படத்தை பார்க்க வேண்டும்” என பெற்றோர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் சலுகை கட்டணத்துக்கான அடையாள அட்டையை குழந்தைகளிடம் கொடுத்தும் அனுப்பியுள்ளார். அந்த திரைப்படம் பார்த்த பள்ளி குழந்தைகளின் பெயர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து பள்ளியின் கல்வி வளர்ச்சி விழாவில் பரிசுகள் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.

ஒரு பள்ளி நிர்வாகமே ‘அப்பா’ படத்தை பார்க்க குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் வலியுறுத்தியுள்ளது சமுத்திரகனியை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூக அக்கறையுள்ள ஒரு படத்தைத்தான் கொடுத்திருக்கிறோம் என்ற மனநிறைவும் அவரிடம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், ‘அப்பா’ படத்தை பார்க்க வலியுறுத்திய பள்ளி நிர்வாகத்திற்கும் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.