செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கிளர்ச்சி ராணுவத்தினர் – போலீசார் இடையே துப்பாக்கிச் சண்டையில் 265 பேர் பலி, தளபதிகள் உட்பட 6000 பேர் கைது | துருக்கி கிளர்ச்சி ராணுவத்தினர் – போலீசார் இடையே துப்பாக்கிச் சண்டையில் 265 பேர் பலி, தளபதிகள் உட்பட 6000 பேர் கைது | துருக்கி

கிளர்ச்சி ராணுவத்தினர் – போலீசார் இடையே துப்பாக்கிச் சண்டையில் 265 பேர் பலி, தளபதிகள் உட்பட 6000 பேர் கைது | துருக்கி கிளர்ச்சி ராணுவத்தினர் – போலீசார் இடையே துப்பாக்கிச் சண்டையில் 265 பேர் பலி, தளபதிகள் உட்பட 6000 பேர் கைது | துருக்கி

1 minutes read

துருக்கியில் அதிபர் தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தின் ஒரு பிரிவினர் நேற்று புரட்சி நடத்தினர்.

ஆனால் பொதுமக்களின் உதவியுடன் ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே பல இடங்களில் கடும் சண்டை நடந்தது. அதில் புரட்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் 100 பேர் கொல்லப்பட்டனர். அதிபர் எர்டோகனிக் ஆதரவாளர்கள் 165 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 265 பேர் பலியாகினர்.
ராணுவ புரட்சியில் ஈடுபட்டதாக தளபதிகள் உட்பட 6000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், துருக்கி நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கொன்யா நகரில் பாதுகாப்பு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களிக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சண்டை நடைபெற்றதாக தெரிவித்துள்ள அந்நாட்டின் தேசிய செய்தி நிறுவனமான அனடோலு, சண்டை முடிவுக்கு வந்துள்ளதாகவும், 6 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கைது செய்யப்படாமல் இருந்த கிளர்ச்சி ராணுவத்தினர் சிலர் மீது எச்சரிக்கை விடுக்கும் விதமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், உடனடியாக அவர்கள் சரணடைந்து விட்டதாகவும் துருக்கி அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 70 ராணுவ தளபதிகள் மற்றும் கடற்படை தளபதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.