செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ரெயில் பயணிகள் மீது கோடரி தாக்குதல் வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர் சுட்டுக்கொலை | ஜெர்மனிரெயில் பயணிகள் மீது கோடரி தாக்குதல் வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர் சுட்டுக்கொலை | ஜெர்மனி

ரெயில் பயணிகள் மீது கோடரி தாக்குதல் வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர் சுட்டுக்கொலை | ஜெர்மனிரெயில் பயணிகள் மீது கோடரி தாக்குதல் வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர் சுட்டுக்கொலை | ஜெர்மனி

1 minutes read

ஜெர்மனியின் தெற்கு பகுதியில் ட்ருச்லிங்கன் நகரில் இருந்து வெர்ஸ்பர்க் நகருக்கு பயணிகள் ரெயில் சேவை நடந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 9.15 மணிக்கு அந்த பயணிகள் ரெயில் வெர்ஸ்பர்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

ரெயில் வெர்ஸ்பர்க் நகரை வந்தடைந்ததும், அதில் பயணம் செய்த ஒரு வாலிபர், சக பயணிகள் மீது சரமாரியாக கோடரியாலும், கத்தியாலும் தாக்குதல் நடத்தினார். இதனால் பயணிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. இந்த தாக்குதலை நடத்திவிட்டு அவர் ரெயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். ஆனால் அவரை போலீசார் துரத்திச்சென்று சுட்டுக்கொன்றனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் அவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 17 வயது அகதி என தெரிய வந்தது.

இந்த தாக்குதல் தொடர்பாக பவேரியா மாகாணத்தின் உள்துறை மந்திரி ஜோவாகிம் ஹெர்மான் அளித்த பேட்டியின்போது, ‘‘பயணிகள் ரெயிலில் தாக்குதல் நடத்திய வாலிபர் ஓச்சன்பியூர்ட் நகரில் வசித்து வந்திருக்கிறார். அவரது அறையில் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு உரிய பொருட்களோடு கையால் வரையப்பட்ட ஐ.எஸ். இயக்கக் கொடியும் இருப்பது தெரியவந்துள்ளது’’ என கூறினார்.

இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர். 3 பேரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை தரப்படுகிறது.

இதற்கிடையே பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர், தங்களது இயக்கத்தைச் சேர்ந்த வீரர் என்று ஐ.எஸ். இயக்கம் அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.