செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆஸ்திரேலியப் பிரதமர் | பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம்ஆஸ்திரேலியப் பிரதமர் | பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம்

ஆஸ்திரேலியப் பிரதமர் | பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம்ஆஸ்திரேலியப் பிரதமர் | பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம்

1 minutes read

ஆஸ்திரேலியாவுக்கு உண்மையான பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதால், பயங்கரவாதத்துக்கு எதிரான மிகக் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்று அந்த நாட்டுப் பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியுள்ளார்.

இதுதொடர்பான வரைவு மசோதா அம்சங்கள் குறித்து மாகாண ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஆஸ்திரேலியா எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலும் உண்மையானது.

அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள், மேற்கத்திய நாடுகள்மீதும், அவற்றின் நட்பு நாடுகள் மீதும் பயங்கரவாதிகளின் கவனம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

கடந்த வார இறுதியில் ஆப்கன் தலைநகர் காபூலில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான தாக்குதல் ஆகும்.

இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக சிறந்த முறையில் செயல்பட, கடுமையான சட்டங்கள் தேவை.

புதிய சட்டத் திருத்தத்தின் மூலம், சந்தேக நபர்களை காலவரையின்றி காவலில் வைத்திருக்க போலீஸாருக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

பாலியல் குற்றவாளிகள், மிகவும் ஆபத்தானவர்களைப் போலவே, பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் நடத்தப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அந்த வரைவு மசோதாவில் சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பை 16 வயதிலிருந்து 14 வயதாகக் குறைப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.