செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் அழகழகாய்…இருமுகம்…அழகழகாய்…இருமுகம்…

அழகழகாய்…இருமுகம்…அழகழகாய்…இருமுகம்…

0 minutes read

அன்பானவளின்
கால் பட்டு சிதறும்
மழை நீர் முத்துக்களில்
தொலைகிற என் முகம்
கரைந்து
நொறுங்கி
இடறி சிதறி
காணாமல் போகிறது

தேடிப்பார்ப்பேன்
பார்வை வீசி
அவள் பாதம் வரையிலும்

மழை நின்று
மிதமாய்
குளிர் குடியேற
குதிக்கிறாள் அவள்
அடடா..!!!

இருவரின் முன்பு
புதிதாய்
தேங்கிய நீர் குட்டை
தெளிவாய் தெரிகிறது
தொலைந்து போன
என் முகம்
முன்னை விட அதிக பிரகாசமாய்

தோள் சாய்ந்து
சந்தோசத்தில்
அவள் முகம்
அழகாய்…
அழகழகாய்…

 

நன்றி : கொ.மா.கோ.இளங்கோ | நிலாச்சாரல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.