6
இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு லசந்தா விக்ரமதுங்கே என்ற பத்திரிகை ஆசிரியர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். அப்போதைய ராஜபக்சே அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2014–ம் ஆண்டு இலங்கை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிபர் சிறிசேனா தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்றது. புதிய அரசு, கிடப்பில் போடப்பட்ட லசந்தா கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து கொலை வழக்கில் தொடர்புடைய ராணுவ அதிகாரி ஒருவர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.
மேலும் வழக்கை விசாரித்து வரும், சி.ஐ.டி. போலீசார், பிரேதபரிசோதனை அறிக்கை முரண்பாடாக இருப்பதால் மீண்டும் பிரேதபரிசோதனை நடத்த முடிவு செய்தனர். இதனையடுத்து கோர்ட்டு உத்தரவின்படி 7 ஆண்டுகளுக்கு பிறகு லசந்தாவின் உடல் நேற்று தோண்டி எடுத்து பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.