செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தந்தையை சுட்டுக்கொன்ற சிறுவன் பள்ளியிலும் சரமாரியாக சுட்டான் | அமெரிக்காதந்தையை சுட்டுக்கொன்ற சிறுவன் பள்ளியிலும் சரமாரியாக சுட்டான் | அமெரிக்கா

தந்தையை சுட்டுக்கொன்ற சிறுவன் பள்ளியிலும் சரமாரியாக சுட்டான் | அமெரிக்காதந்தையை சுட்டுக்கொன்ற சிறுவன் பள்ளியிலும் சரமாரியாக சுட்டான் | அமெரிக்கா

1 minutes read

அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணம், ஆன்டர்சன் நகரில் 14 வயது சிறுவன் ஒருவன் நேற்று முன்தினம் மதியம், தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான்.

சுட்டுக்கொல்லப்பட்ட அவனது தந்தையின் பெயர் ஜெப்ரி டெவிட் ஆஸ்பார்ன் (வயது 47).

அதைத் தொடர்ந்து தந்தையின் வாகனத்தை அவன் 3 கி.மீ. தொலைவில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு ஓட்டிச்சென்றான். காரை அவன் அந்தப் பள்ளிக்கூட விளையாட்டு மைதான வேலியின் மீது மோதினான். அதைத் தொடர்ந்து கைத்துப்பாக்கியால் பள்ளிக்குள் சரமாரியாக சுட்டான்.

அதில் 2 குழந்தைகளும், ஒரு ஆசிரியரும் படுகாயம் அடைந்தனர்.

இதனால் பெரும் பதற்றம் அடைந்த பள்ளி நிர்வாகம், உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தது. 7 நிமிடங்களில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் சிறுவனை தன்னார்வ தீயணைப்பு வீரர் ஜாமி பிராக் என்பவர் மடக்கி பிடித்தார். அவன் போலீசார்வசம் ஒப்படைக்கப்பட்டான். அவனிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுவன் தனது விபரீதத்தை தொடர்ந்து விடாதபடிக்கு அவனை சரியான நேரத்தில் மடக்கிப்பிடித்த தன்னார்வ தீயணைப்பு வீரர் ஜாமி பிராக்கிற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்தன.

படுகாயம் அடைந்த குழந்தைகளும், ஆசிரியரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 6 வயது குழந்தை ஒன்றின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.