செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஜெயராம்- ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘செண்பக கோட்டை’ | 2 ஆயிரம் வருடங்களுக்கு முன் நடக்கும் கதைஜெயராம்- ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘செண்பக கோட்டை’ | 2 ஆயிரம் வருடங்களுக்கு முன் நடக்கும் கதை

ஜெயராம்- ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘செண்பக கோட்டை’ | 2 ஆயிரம் வருடங்களுக்கு முன் நடக்கும் கதைஜெயராம்- ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘செண்பக கோட்டை’ | 2 ஆயிரம் வருடங்களுக்கு முன் நடக்கும் கதை

1 minutes read

2 ஆயிரம் வருடங்களுக்கு முன் நடப்பது போல் ஒரு பயங்கர பேய் படம் தயாராகியிருக்கிறது. இந்த படத்துக்கு, ‘செண்பக கோட்டை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில், ஜெயராம்-ரம்யா கிருஷ்ணன் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்.

சம்பத், முக்கிய வேடத்தில் நடிக்க, பிரபல இந்தி நடிகர் ஓம்புரி சாமியார் வேடத்தில் நடித்து இருக்கிறார். இவர் நடித்துள்ள முதல் தமிழ் படம் இது. ‘ஆடுகளம்’ நரேன் வில்லனாக நடித்து இருக்கிறார். ஷீலு இப்ராகிம் இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார். பேபி அக்‌ஷரா இஷோர், பேபி அஞ்சலினா ஆகிய இருவரும் பேயாக வருகிறார்கள்.

ரதீஷ் வேகா இசையமைக்க, ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கண்ணன் தாமரக்குளம் டைரக்டு செய்துள்ளார். இவர், ‘சூறையாடல்’ என்ற தமிழ் படத்தையும், ‘திங்கள் முதல் வெள்ளி வரை,’ ‘ஆடு புலி ஆட்டம்’ என்ற 2 மலையாள படங்களையும் டைரக்டு செய்தவர். ‘செண்பக கோட்டை’ படத்தை பற்றி இவர் கூறியதாவது:-

“2 ஆயிரம் வருடங்களுக்கு முன் நடப்பது போன்ற இந்த கதை, மூன்று காலகட்டங்களில் நடைபெறுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு ராஜா, காட்டுவாசி பெண் ஒருத்தியை காதல் திருமணம் செய்து கொள்கிறார். ஒரு கட்டத்தில், ராஜாவுக்காக அவருடைய காதல் மனைவி உயிரை விடுகிறார். அவளுடைய ஆவி 2 குழந்தைகளுக்குள் புகுந்து என்ன செய்கிறது? என்பது கதை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.