உக்ரைனில் விஷ சாராயம் குடித்து நாடு முழுவதும் 38 பேர் இறந்துள்ளதாக அந்த நாட்டின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் தலைவரான விளாடிமிர் லாபா இது பற்றி கூறுகையில், ‘‘38 பேர் விஷ சாராயத்துக்கு பலியாகி உள்ள நிலையில், இன்னும் 39 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர். விஷ சாராயம் குடித்து உயிர் பிழைத்தவர்களில் சிலரது கண்பார்வை பறி போய்விட்டது’’ என்றார்.
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
விஷ சாராய தயாரிப்பில் ஈடுபட்டதாக அங்கு இதுவரையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 டன் மெதில் ஆல்ஹகால், தொழில்நுட்ப சாதனங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.