செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கருக்கலைப்பு தடைச்சட்டம் மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வி | போலந்துகருக்கலைப்பு தடைச்சட்டம் மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வி | போலந்து

கருக்கலைப்பு தடைச்சட்டம் மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வி | போலந்துகருக்கலைப்பு தடைச்சட்டம் மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வி | போலந்து

1 minutes read

ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில் ஒன்ற போலந்து. பெரும்பாலான நாடுகளில் கருக்கலைப்பு தடைச்சட்டம் இருந்த போதிலும் போலந்து நாட்டில் அதற்கான சட்டம் இல்லை.

சுமார் 3 கோடியே 80 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் ஆண்டிற்கு 2 ஆயிரம் கருக்கலைப்புகள் சட்ட முறைப்படி நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதேவேளையில் சட்டத்திற்கு மாறாகவும், வெளிநாட்டிலும் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் கருக்கலைப்புகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதனால் அங்குள்ள பொதுமக்கள் கருக்கலைப்பு தடைச்சட்டம் கொண்டு வரவேண்டும் வலியுறுத்தினார்கள். அத்துடன் வீதிகளில் இறங்கி ஆயிரக்கணக்கான மக்கள் போரட்டம் நடத்தினார்கள். பெர்லின், லண்டன், பாரிஸ் போன்ற முக்கிய நகரங்களிலும் போலந்து மக்கள் இந்த கருத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள்.

இதனால் போலந்து ஆளுங்கட்சியான கன்சேர்வேட்டிவ் கட்சி, கருக்கலைப்பு தடைச் சட்டத்திற்கான மசோதாவை பாராளுமன்றத்தின் கீழ் அவையில் தாக்கல் செய்தது. அந்த மசோதாவில் தாயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் இருக்கும்போது கருக்கலைப்பு செய்யப்பட்டால், டாக்டருக்கு இரண்டு முதல் ஐந்தாண்டு வரை தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

450 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தின் கீழ் அவையில் நீண்ட விவாத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடந்தது. இதில் கருக்கலைப்பு தடைச் சட்டத்திற்கு எதிராக 352 வாக்குகள் பதிவாகின. 58 வாக்கள் மட்டுமே சட்டத்திற்கு ஆதராவாக விழுந்தது. இதனால் கருக்கலைப்பு தடைச்சட்டம் தோல்வியில் முடிந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.