ஹைதி நாட்டை ‘மேத்யூ’ என்ற புயல் தாக்கியதில் அந்த நாடு சின்னாபின்னமானது. புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. புயல்-மழைக்கு பல்லாயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்து விட்டன. தெருக்களில் காணும் இடமெல்லாம் பிணக்குவியலாக காட்சி அளிக்கிறது.
நேற்று காலை நிலவரப்படி புயல்-மழைக்கு 478 பேர் பலியானதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இரவில் பலி எண்ணிக்கை 842 ஆக அதிகரித்து உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.