அக்டோபர் 18
‘இவனுக்கு படிப்பு ஏறாது’ என, பள்ளிக்கூட ஆசிரியர்களால் வெளியேற்றப்பட்டவர், 1,300 கண்டுபிடிப்புகளை இவ்வுலகிற்கு தந்த மாபெரும் விஞ்ஞானி ஆனார். அவர் தான், தாமஸ் ஆல்வா எடிசன்!கடந்த, 1847 பிப்., 11ல், அமெரிக்காவில் உள்ள ஓஹியோ நகரில் பிறந்தார்; ரயில் நிலையத்தில் பேப்பர் விற்றார். சிறு வயதிலேயே, காது கேட்கும் திறன் பாதித்திருந்தது, அவரின் சிந்தனையை ஒருமுகப்படுத்த உதவியது.மின்சார பல்பு, எலக்ட்ரிக் ஜெனரேட்டர், டெலிகிராப் சிஸ்டம், மெகா போன், மோட்டார், ஒலிபெருக்கி, கிராமபோன், திரைப்பட ஒளிப்பதிவு கருவி உள்ளிட்டவை, இவரின் கண்டுபிடிப்புகளில் சில. 1,093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றிருந்தார். மின்சார யுகத்தின் தந்தை, தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த தினம் இன்று!
15