ஞாபக மறதிக்கு உடற்பயிற்சி சிறந்த பலன் கொடுப்பதாக கனடா நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் தங்களது ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
தற்போது உலகில் பல கோடி பேருக்கு ஞாபக மறதி பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. இப்பிரச்னை மூளையில் ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதால் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல், புகை போன்ற கெட்ட பழக்கங்கள் தவிர்த்தல் போன்றவை மூளையில் ரத்த ஓட்டம் அதிகரிக்க உதவினாலும் வாரத்திற்கு மூன்று முறையாவது மிதமான உடற்பயிற்சி மூளையில் சீரான ரத்தஓட்டததிற்கு உதவுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உடல் பயிற்சி மூலம் மூளையி்ல் சீரான ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் ஞாபக சக்தி, முடிவெடுக்கும் திறன் , மாணவர்களின் கல்வி போன்றவை சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது என்று மருததுவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
இதற்காக கனடா நாட்டின் வான்கூவர் நகரில் உள்ள பிரிடிஷ் கொலம்பியா பல்கலை மருத்துவர் லியு அம்ப்ரோஸ் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். இதில் 75 வயது நிரம்பிய முதியவர்களை இரண்டு பிரிவாக பிரித்து ஒரு பிரிவினருக்கு ஆரோக்கிய உணவு மற்றும் மருத்துவம் மட்டும் அளிக்கப்பட்டது, மற்றொரு பிரிவினருக்கு ஆரோக்கிய உணவுடன் வாரம் மூன்று முறை உடற்பயிற்சி மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இரண்டு மாதம் கழித்து உடற்பயிற்சி மேற்கொண்டவர்களின் அறிவுத்திறனும் ஞாபகசக்தியும் கூடியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.