செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் போலீசால் சுட்டுக் கொலை இலங்கை | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் போலீசால் சுட்டுக் கொலை

இலங்கை | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் போலீசால் சுட்டுக் கொலை இலங்கை | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் போலீசால் சுட்டுக் கொலை

1 minutes read

இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் இலங்கை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.

தமிழர்கள் அதிகமாக வாழும் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் போலீஸ் சோதனைச் சாவடியில் இரு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.

முதல் கட்டமாக இலங்கை காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று மறுத்து வந்து உள்ளது. இதற்கிடையே மாணவர் ஒருவரின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த தடங்கள் காணப்பட்டது. இதனையடுத்து சோதனைச் சாவடியில் பணியில் இருந்த 5 போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சுதந்திரமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திஉள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிஐடி போலீசார் விசாரிப்பதாக இலங்கை அரசு தெரிவித்து உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.