செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ரெயில் தடம் புரண்ட கோர விபத்தில் 55 பேர் பலி; 575 பேர் காயம் | கேமரூன்ரெயில் தடம் புரண்ட கோர விபத்தில் 55 பேர் பலி; 575 பேர் காயம் | கேமரூன்

ரெயில் தடம் புரண்ட கோர விபத்தில் 55 பேர் பலி; 575 பேர் காயம் | கேமரூன்ரெயில் தடம் புரண்ட கோர விபத்தில் 55 பேர் பலி; 575 பேர் காயம் | கேமரூன்

1 minutes read

கேமரூன் நாட்டில் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு, தண்டவாளத்தில் இருந்து கீழே விழுந்து கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

கேமரூன் நாட்டில் ரெயில் தடம் புரண்டு நேரிட்ட கோர விபத்தில் 55 பேர் பலியாகினர். 575 பேர் காயம் அடைந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடு கேமரூன். அங்கு தலைநகர் யாவுண்டே நகரில் இருந்து துறைமுக நகரான டாவுலா நகருக்கு நேற்றுமுன்தினம் காலை ஒரு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. வழக்கமாக 600 பேர் பயணம் செய்யும் ரெயிலில் 1,300 பேர் பயணம் செய்தனர்.

இந்த ரெயில், எசேகா நகர் அருகே உள்ளூர்நேரப்படி காலை சுமார் 11 மணிக்கு (இந்திய நேரம் பகல் 3.20 மணி) சென்று கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராமல் தடம் புரண்டது. அதிலும் பெட்டிகள், தண்டவாளத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு கீழே கவிழ்ந்தன. ரெயில் தடம்புரண்டபோது பலத்த சத்தம் எழுந்ததால் பயணிகள் அலறியடித்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு மீட்பு பணி முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டது.
ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து துண்டித்து, கீழே விழுந்து கிடந்தது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த கோர விபத்தில் 55 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 575 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, ஆம்புலன்சுகளில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

பலியானவர்களில் பலர் பெண்கள், குழந்தைகள். அவர்களது உடல்கள், ரெயில் பெட்டிகளை வெட்டி எடுத்து மீட்கப்பட்டுள்ளன.

இந்த ரெயில் விபத்து குறித்து அந்த நாட்டின் போக்குவரத்து மந்திரி எட்கார் அலாய்ன் மெபே நேற்று கூறுகையில், “இந்த ரெயில் விபத்தில் 55 பேர் பலியாகி இருப்பது உறுதியாகி உள்ளது. காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ளது. விபத்துக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்” என்றார்.

விபத்து நடந்த பகுதியில் பலத்த மழை பெய்து, சாலையில் ஒரு பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து சாலை போக்குவரத்து பாதிப்புக்குள்ளானதால், அந்த தட ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

விபத்துக்குள்ளான ரெயிலில் பயணம் செய்த பத்திரிகையாளர் ஒருவர் கூறும்போது, “ரெயிலில் திடீரென பலத்த சத்தம் கேட்டது. நான் திரும்பிப்பார்த்த போது ரெயில் பெட்டிகள் கவிழ்ந்ததை கண்டேன். பெரிய அளவில் புகையும் எழுந்தது. ரெயில் புறப்படுவதற்கு முன் யாவுண்டே ரெயில் நிலையத்தில் வைத்து ரெயில்வே அதிகாரி ஒருவர், இந்த ரெயிலில் வழக்கமாக 9 பெட்டிகள் இருக்கும். இப்போது கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்” என தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.