இத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின.
மத்திய இத்தாலி மற்றும் ரோம் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பெருஜியா நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. ரிக்டர் அளவில் 5.6 என பதிவாகியுள்ளதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரோம் பழமையான கட்டடங்கள் நிரம்பியுள்ள நகரம். அங்குள்ள பழமையான கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.