செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் தீசீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் தீ

சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் தீசீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் தீ

1 minutes read

தென்மேற்கு சீனாவின் லாய்சு நகரில் தனியாருக்கு சொந்தமான மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தினுள் இன்று சுமார் 35 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதனால் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். வாசலுக்கு மிக அருகாமையில் இருந்த 2 பேர் மட்டும் உடனடியாக வெளியேறிவிட்டனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 15 தொழிலாளர்கள் உயிரிழந்ததை அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. மேலும் 18 தொழிலாளர்களைக் காணவில்லை. அவர்கள் சுரங்கத்தில் எந்த பகுதியில் சிக்கியிருக்கிறார்கள் என்று சுரங்க நிபுணர்கள் தேடி வருகிறார்கள்.
 இந்த விபத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள அனைத்து சுரங்கங்களிலும் நிலக்கரி உற்பத்தியை நிறுத்தும்படி நகராட்சி உத்தரவிட்டுள்ளது.
உலகிலேயே அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் சீனாவில், நிலக்கரி சுரங்க விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 பேரும், மார்ச் மாதம் 19 பேரும் சுரங்க விபத்துகளில் சிக்கி பலியாகி உள்ளனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.