தாய்லாந்து மன்னராக இருந்தவர் பூமியால் அது லயதேஷ் (88) இவர் 70 ஆண்டுகள் மன்னராக இருந்தார். அதன் மூலம் உலகின் நீண்ட நாள் மன்னர் ஆக பதவி வகித்தவர் என்ற பெருமை பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த மாதம் (அக்டோபர்) 13-ந்தேதி மரணம் அடைந்தார்.
அதை தொடர்ந்து தாய்லாந்தின் புதிய மன்னர் யார் என்ற கேள்வி எழுந்தது. பலவித யூகங்கள் கிளப்பப்பட்டன.
இந்த நிலையில் பட்டத்து இளவரசர் மகா வஜிர லாங்கோர்ன் புதிய மன்னர் ஆக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மரணம் அடைந்த மன்னர் பூமிபால் அதுலய தேசின் மகன் ஆவார்.
இவருக்கு 64 வயது ஆகிறது. இவர் வருகிற டிசம்பர் 1-ந்தேதி புதிய மன்னர் ஆக பதவி ஏற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கி விட்டன.