2
இதில நில்
வாறன்
என்றவன் வரவேயில்லை..
வயிற்றுப்பொருமல் என்றவன்
ஒதுக்கிடம் பார்த்துப்போனான்.
கற்றடிக்குது..
புயல் வரப்போகுது
அம்மா பேசும்
அல்லது மனைவி கேட்பாள்
என்றவனைப் பின்னர் காணவே இல்லை..
உந்த மழைக்கை ஏன் நிற்கிறாய்.
வழிப்போக்கர்களும் சொல்லியாயிற்று..
உதுல நிக்காதை
அவன்கள் வந்தால் பிரச்சினை
யாரோ சொல்லிசென்றது
காதில் ஏறவில்லை..
என் மண்ணில்
உறுதியாய்
கால் பதித்து நிற்கிறேன்.
– முல்லை அமுதன் –