கலிபோர்னியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இந்த அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தற்போது அவசர கால மதகு வழியாக அணையின் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால், எந்த நேரத்திலும் மதகு உடையலாம் என கலிபோர்னியா நீர் வளத்துறை எச்சரித்து உள்ளது. எனவே ஒரோவில்லே நகரில் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
ஒரோவில்லே நகரில் சுமார் 16 ஆயிரம் பேர் வசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சவாளியினர் என மற்றொரு தகவல் கூறுகிறது.
தற்போது அங்கிருந்து வெளியேற தொடங்கியுள்ள மக்கள் குடும்பம் குடும்பமாக வாகனங்களில் அணிவகுத்து செல்வதால் அங்கு உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது.